ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் காற்று வாங்கும் மத்திய கிழக்கு மார்க்கெட்…
மலிவான விலையில் கச்சா எண்ணெய் எங்கே கிடைக்கும் என சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறது இந்திய அரசு
இந்தநிலையில் மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் நம்பி இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இதன் காரணமாக ஈராக் மற்றும் சவுதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஈராக்கில் இருந்து அதிகபட்சமாகவும், சவுதி அரேபியாவிடம் இருந்து இரண்டாவது அதிகபட்சமாக கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வந்த நிலையில், சவுதி அரேபியாவை விட ரஷ்யாவில் கச்சா எண்ணெய் மலிவாக கிடைப்பதால் ஈராக்குக்கு அடுத்த படியாக ரஷ்யாவிடம்தான் இந்தியா அதிக கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது
இந்தியாவிற்கு ஒருநாளைக்கு 30 லட்சத்து 91 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது
ரஷ்யாவில் இருந்து மட்டும் 8 லடசத்து 96ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.ஆப்ரிக்க கச்சா எண்ணெய்
இறக்குமதியும் கணிசமாக குறைந்துள்ளது.ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும்
பல நாடுகளிலும் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் பிரச்னையை இந்தியாவால் எளிதில் சமாளிக்கல முடிகிறது