ஜெர்மன் நிறுவனத்தை வாங்கிய முருகப்பா குழுமம்..
சென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் முருகப்பா குழுமம். இந்தநிறுவனம் அண்மையில்ஹி யூபர்குரூப் என்ற ரசாயனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 310 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இந்த டீல் முடிய உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உலகளாவிய வளர்ச்சிக்கு இந்த அம்சம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவென்யு கேப்பிட்டல் குழுமம் சேர்ந்து இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமம் வாங்கியுள்ளது. 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஹியூபர்குரூப் கடனை முருகப்பா ஏற்றுக்கொள்வது எனவும், 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளை வெளியிடவும் இந்த நிறுவனங்கள் இடையே முடிவு எட்டப்பட்டுள்ளது. ஹியூபர்குரூப் நிறுவனத்தை வாங்க எடல்வெயிஸ் நிறுவனம் போட்டிபோட்ட நிலையில் முருகப்பா குழுமம் அதை தட்டித்தூக்கியுள்ளது. ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டிருந்தாலும், ஹியூபர்குரூப் நிறுவனம் இந்தியாவில் அச்சு ஊடகத்திற்கு ரசாயனம் வழங்குவதில் முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனம் முதலில் இந்தியாவில் 1991 -ல்தான் இயங்கி வந்தது. பின்னர் ஜெர்மனி நிறுவனம் இதை வாங்கியது. பிராதனமாக அச்சு மை , ரெசின்களை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. வாபி, டாமன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிறுவனத்தின் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்துக்கும் இந்த நிறுவனம் தனது ரசாயனங்களை ஏற்றுமதி செய்து வந்தது. இந்தியாவில் விவசாயம் சார்ந்த பொறியியல் பொருட்கள், ஆற்றல்உற்பத்தி, சோலமண்டலம் பைனான்ஸ் , டியூப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை முருகப்பா குழுமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.