எச்சரிக்கும் நாராயண மூர்த்தி..
கால நிலை மாற்றத்தை சரியாக கவனிக்கவில்லை எனில் மக்கள் அதிகளவில் புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் இடம்பெயர நேரிடும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி எச்சரித்துள்ளார். அதிக வெப்பநிலை மற்றும் காலநிலைகளால் மக்கள் மற்ற பகுதிகளில் வசிக்கவே முடியாத சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தியா மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் சில இடங்களில் மக்கள் வசிக்கவே முடியாத நிலை வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மக்கள் அதிகளவில் பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரங்களை நோக்கி நகர்வதால் இந்த நகரங்களிலும் டிராபிக் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றார். அரசியல்வாசிகள், அதிகாரிகளுடன் இணைந்து இந்த இடம்பெயர்வை கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்றும், இது சவாலானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். தற்போது எந்த பாதிப்பும் இல்லை என்ற போதிலும் 2030-ல் இது பெரிய பிரச்சனையாக மாறும் என்பதால் கடைசி நேரத்தில் இல்லாமல் இப்போதே செயல்படவேண்டும் என்றும் கூறினார். சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் மீது இளைய தலைமுறையினருக்கு அக்கறை இருக்க வேண்டும் என்றும் நாராயண மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.