வழக்கமான வருமான வரி சோதனை – Dolo 650 ஐ நிறுவனம்
அண்மையில் Dolo 650 ஐ தயாரிக்கும் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ நிபுணர்களுக்கு இலவசங்களை வழங்க ₹1,000 கோடி செலவிட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களிள் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து மைக்ரோ லேப்ஸ் மூத்த நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். அவர் கூறுகையில், டோலோ 650 கடந்த 20 ஆண்டுகளாக பிராண்ட் லீடராக இருந்து வருகிறது. இந்த மில்லிகிராமில் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியதில் முதலில் சந்தையில் நாங்கள் இருந்தோம் என்று தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது Dolo 650 எல்லா இடங்களிலும் கிடைப்பதை உறுதி செய்ததாக அவர் கூறினார். மேலும் தேசிய விலை மருந்து ஆணையத்தின் (NPPA) விலைக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் Dolo 650mg உற்பத்தியை இரட்டிப்பாக்குவதில் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இது வழக்கமாக நடக்கும் வருமான வரித்துறை சோதனையாகவே பார்க்கிறேன். சமீபத்தில், மைக்ரோ லேப்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, அனைத்து ஆவணங்களையும் சேகரிக்க அவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்கினோம்.
கடந்த வருடங்களில் டோலோ 650க்கான விற்றுமுதல் ₹350 கோடியில் 2-3% கூட இருக்காது. இது ஒரு வருடத்தில் சுமார் ₹5-6 கோடி வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.