பேமன்ட் காரணமில்லை…
உக்ரைனுடனான போரால் கடுமையான நிதிச்சுமையில் உள்ள ரஷ்யாவுடன் எண்ணெய் வணிகத்தை பல நாடுகளும் செய்ய முன்வரவில்லை. குறைவான விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தபோது இந்தியா ரஷ்யாவிடம் இருந்துதான் அதிக கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை இந்தியா குறைத்துள்ளது. இதற்கு பேமண்ட் தான் காரணம் என்று புகார் எழுந்தது. இதனை மத்திய பெட்ரோலிய அமைச்ச் ஹர்தீப் சிங் பூரியிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்துள்ள மத்திய அமைச்சர் புரி, விலை அதிகரித்தது தான் காரணம் என்று குறிப்பிட்ட அவர், பேமண்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். 60 டாலுருக்கு மேல் ரஷ்யா கச்சா எண்ணெய் விற்கக்கூடாது என்ற தடை ரஷ்யா மீது உள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா ஒரு நாளைக்கு 15 லட்சம் பேரல் என்ற அளவில் வாங்கி வந்ததாகவும், ரஷ்யா நல்ல விலைக்கு பெட்ரோலை தரவில்லை என்று கூறிய புரி, வேறு எந்த நாடு குறைவான விலையில் கச்சா எண்ணெய் தருகிறார்கள் என்ற விவரத்தை மத்திய அமைச்சர் தரவில்லை,.
உலகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்கு 3 ஆவது இடம் உள்ளது. இதில் ரஷ்யாவில் உள்ள கடலில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் பங்கு அதிகம். இப்போது வரை கச்சா எண்ணெய் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.