காப்பீட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..
சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அண்மையில் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. எச்டிஎு்சி, எர்கோ ஜெனரல்,கோ ஸ்டார் ஹெல்க் மற்றும் நியூ இந்தியாஅசுரன்ஸ் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் பறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டிஜிஜிஐ விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு ஏற்படலாம் என்ற கோணத்தில் இந்த விசாரணையானது நடந்தது. ஏற்கனவே இதே பாணியில் 30 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நிறுவனங்கள் அந்த அறிவிப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். 5,500 கோடி ரூபாய் களவு போயிருக்கும் என்றும் தகவல் வெளியானது. காப்பீட்டு நிறுவனங்கள் அளித்த விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வணிகம் மற்றும் கொழில்துறை அமைச்சகத்தில் இருந்து கடிதமும் வந்துள்ளதாகவும் , ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிவை முறைப்படுத்தவும், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விலக்கு அளிக்கவும்பரிசீலிக்க அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. விசாரணையில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பதிந்த காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மீறியுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.