அய்யய்யோ!!! தலைவரே இப்படி சொன்னா என்ன பண்றது???
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபட் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டில்
ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது திறமையான பணியாளர்களை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளும் ஆல்ஃபபட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது வியூகத்தை மாற்றியுள்ளது. தேவையில்லாமல் நிறைய பணியாளர்களை எடுக்காமல் திறமையான தகுதியான நபர்களை மட்டுமே புதிதாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்
கடந்த இரண்டு நிதியாண்டுகளாக ஆல்ஃபபெட் நிறுவனத்தின் லாபம் கணிசமாக குறைந்துள்ளதால் இந்த
நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் ஆல்ஃபபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
ஆட்குறைப்பு என்றதும் முழுமையாக ஏற்கனவே பணியில் இருப்பவர்களை நீக்குவது அல்ல என்றும் புதிதாக
எடுக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை விகிதம் குறையும் என்றும் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஆல்ஃபபெட் நிறுவனத்தில் இதுவரை உலகம் முழுக்க 1 லட்சத்து 86 ஆயிரத்து 779 ஊழியர்கள் உள்ளதாகவும்
4ம் காலாண்டில் புதிதாக எடுக்கும் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சிக்கன நடவடிக்கையாக ஸ்டேடியா என்ற கேம் ஸ்ட்ரீமிங் சேவை,பிக்சல் புக் லேப்டாப் உற்பத்தி நிறுத்தம்
ஆகிய நடவடிக்கைகளில் கூகுள் இயங்கி வருகிறது. 2023ம் ஆண்டு வரை சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்றும்
சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையற்ற சூழலில் மிகச்சரியான முதலீடு அவசியம் என்று குறிப்பிட்டுள்ள பிச்சை,ஆல்பபெட் நிறுவனத்தில்
கடந்தாண்டு இருந்தததை விடவும் தற்போது 41 விழுக்காடு வளர்ச்சி குறைந்திருப்பதாகவும் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிரபல நிறுவனமான யூடியூபிலும் விளம்பர வருவாய 7.2 விழுக்காட்டில் இருந்து தற்போது 7.07விழுக்காடாக சரிந்துள்ளதாக
பிச்சை சுட்டிக்காட்டியுள்ளார். ஆல்பபெட் குழுமத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி வரும் கூகுள் நிறுவனத்தின் வருவாய்
மட்டும் ஆண்டுதோறும் 4 விழுக்காடு அதிகரித்தபடி செல்கிறது. கூகுள் நிறுவனத்தில் ஆண்டுதோறும் கிடைக்கும் வருவாய்
இந்தாண்டு 54.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருப்பதாகவும் பிச்சை தெரிவித்துள்ளார்..