ஓலா பவிஷின் புதிய அறிவிப்பு..
ஓலா நிறுவனத்தின் செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ONDC என்ற தளத்தின் உதவியுடன் உணவு டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ONDC நிறுவனங்கள்தான் வணிகத்தின் வருங்காலம் என்றும் பவிஷ் கூறியுள்ளார். பெங்களூருவில் ஓலா டேஷ் என்ற சேவையையும் ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும். 1 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள உணவகங்களில் இருந்து இந்த உணவு டெலிவரி செய்யப்படுகிறது.
கடந்த 2022-ல் இந்த சேவை தொடங்கப்பட்டு, 10 நிமிடங்களில் காய்கனிகளை டெலிவரி செய்ய திட்டமிட்டு 6 மாதங்களில் அது கைவிடப்பட்டது. ஓஎன்டிசி மூலமாக ஓலா தற்போது உணவு, வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்து வருகிறது.
ஓலாவைப்போலவே செப்டோ நிறுவனமும் காபி கடைகளுக்கு புதிதாக ஒரு சேவை அளிக்ப்போவதாக தெரிவித்துள்ளது.
ஸ்விகியில் போல்ட் என்ற சேவையைப் போலவே ஓலா டேஷ் இயங்கும். ஓலா பைக் டாக்சிகளின் சேவைகளையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 10 கிலோமீட்டருக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 கிலோமீட்டர் தூர்த்துக்கு இந்த கட்டணம் 25 ரூபாயாக உள்ளது.