வேலையை காட்ட தொடங்கிய ஆன்லைன் நிறுவனங்கள் ….
வாடிக்கையாளர்கள் கடவுள் போன்றவர்கள் அப்டிங்கிற வாசகம் ரொம்பவும் புளித்துப்போனது போல தற்போதைய அண்மை சம்பவங்கள் நடக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் சரியில்லை என்று புகார் அளித்தால் புகாருக்கு பதில் அளிக்காமல் அக்கவுண்டையே பிளாக் செய்யும் சூழல் தற்போது அதிகரித்து வருகிறது.அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களில் பல உடைந்து போய் காணப்படுவதால் அண்மையில் ஒரு வாடிக்கையாளர் ஒரே வாரத்தில் 3 பொருட்களை ரிட்டர்ன் செய்து அதற்கான காசை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அதற்கு எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அவரின் கணக்கு முடக்கப்படுவதாக அமேசான் நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.இதேபோல பஞ்சாபைச் சேர்ந்த வருண் சவ்ஹான் என்ற இளைஞர் தனக்கு தேவையான 44 பொருட்களை பிளிப்கார்ட் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார். 14 பொருட்கள் சேதமடைந்ததாக ரிட்டர்ன் அளித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் கணக்கு முடக்கப்பட்டது
இது தொடர்பாக வருண் புகாரையும் அளித்துள்ளார். எந்தவித முன்னறிவிப்போ, இத்தனை முறைதான் பொருட்களை திரும்ப அளிக்க வேண்டும் என எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் திடீரென பொருட்களை ரிட்டர்ன் செய்யும் வாடிக்கையாளர்களின் கணக்கை முடக்குவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது. முன்பெல்லாம் பொருட்களை ரிட்டர்ன் செய்ய 30 நாட்கள் வரை கெடு விதித்து இருந்தார்கள் தற்போது அது 7 முதல் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை கவர நல்ல சேவை வழங்கி வந்த நிறுவனங்கள் திடீரென கணக்குகளை முடக்கி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.