எனக்கா எண்டு கார்டு போட பாக்குறீங்க!!!! எச்சரிக்கும் புடின்!!!!
உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெயின் பங்கு முக்கியமானதாக உள்ளது இந்த சூழலில் மேற்கத்திய நாடுகள் கச்சா எண்ணெய் விலையின் உச்ச வரம்பை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்து ஈராக் நாட்டு பிரதமருடன் , ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது பேசிய புதின், கடுமையான பாதிப்புகளை இந்த முடிவு ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தை மேற்கத்திய நாடுகளின் இந்த முடிவு கடுமையாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய புதின்,சந்தையில் உள்ள நல்லுறவு இந்த விலை நிர்ணயத்தால் பெரிய சிக்கலை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுக்க தொடங்கிய ரஷ்யாவுக்கு பல்வேறு மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பல வகைகளில் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனால் ரஷ்யாவிடம் இருந்து பல மேற்கத்திய நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இதுதான் வாய்ப்பு என உஷாராக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை மலிவு விலைக்கு வாங்கி சமயோசிதமாக செயல்பட்டுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய பாதிப்புகளை சந்திக்க வில்லை என்றாலும் இந்தியாவுக்கு இது சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.