பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..
கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் பொதுநிதி நிதி என்ற அமைப்பு இருக்கையில் பிஎம்கேர்ஸை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள்
பிரதமரை தலைவராக கொண்டு செயல்படும் பிஎம் கேர்ஸ் அமைப்பில் திடீரென டாடா குழுமத்தின் மூத்த நிர்வாகி ரத்தன் டாடா, நீதிபதி கே.டி தாமஸ் உள்ளிட்டோர் பிஎம் கேர்ஸ் அமைப்பின் அறக்கட்டளை குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அரசின் விதிகளுக்கு உட்படாமல் தானாக இந்த அமைப்பு செயல்படுவதாகவும், மத்திய கணக்கு தணிக்கைத்துறை மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் இந்த அமைப்பு ஏன் வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆரம்பம் முதலே வெளிப்படைத்தன்மை இல்லாமல் எப்படி ஒரு அமைப்பில் நாட்டின் பிரதமர் இருக்கமுடியும் என்ற கேள்வியும் வலுவாக எழுகிறது
80 வயதுக்கு மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும் என்று நிர்ணயித்தது யார் என்றும், அவர்களை நியமித்தது யார் எனவும் பல அடுக்கடுக்கான விடைதெரியா கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.