முத்ரா கடன் வரம்பை குறைக்கும் தனியார் வங்கிகள்..
முத்ரா கடன் என்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் உதவி கடன் தொகையாகும். சிறு குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்களின் அளவு குறைந்து வருவதால் சில தனியார் வங்கிகள் முத்ரா வங்கிக்கடன்களின் அளவை குறைத்துக்கொண்டனர். கடந்த மாதம் நடந்த தனியார் வங்கிகளின் கூட்டத்தில் இந்த கடன் அளவை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ல் 1.28லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவான 110 விழுக்காடை வழங்கியுள்ளதாகவும், மத்திய அரசு முத்ரா கடனில் தருன் பிளஸ் என்ற பிரிவு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. தருண் பிளஸ் வகை கடன்களில் வங்கிகள் 20லட்சம் ரூபாய் வரை தனிநபருக்கு கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் வாராக்கடன் 38%ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் , அதே நேரம் முத்ரா கடனில் வாராக்கடன் பொதுத்துறை வங்கிகளில் 3.40%ஆகவும் சரிந்துள்ளது. கடந்த 2020-21 காலகட்டத்தில் இந்த கடன் 4.77%ஆக இருந்தது. எம்எஸ்எம்இ பிரிவில் சொத்துகள் இல்லை என்றாலும் பொதுத்துறை வங்கிகள் அதிகம் கடன் தரவேண்டும் என்று அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். சிறுகுறு நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உத்தரவாதம் தருவது குறித்து அண்மையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.