இப்ப வேலையை விட்டு தூக்குரையா??? இல்லையா???
உலகளவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டா என்ற பெயரில் இயங்கி வருகிறது
பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதனால் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வருகிறது. வருவாய் இழப்பை சரிசெய்யவும்
நிர்வாகத்துக்கு தேவையான பணத்தை இருப்பில் வைக்கவும் பங்குச்சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தில் முதலீடு
செய்துள்ளோர் மார்க் ஜூக்கர்பர்க்குக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளனர்
அதிலும் குறிப்பாக அல்டி மீட்டர் என்ற நிறுவனம் பேஸ்புக்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலீட்டு தொகைகளை குறைத்துக்கொள்ளவும்
தேவையில்லாத பதவிகளில் இருப்பவர்களை பணிநீக்கம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஹெட்ஜ் பண்ட் எனப்படும் முறையில் நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதும்,பூஜ்ஜியம் புள்ளி 1 %மட்டுமே ஓனர்ஷிப் வைத்திருப்பதும்
அந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது, 20 விழுக்காடு
பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும், ஆண்டுக்கு முதலீட்டை 25 பில்லியன் டாலராக குறைக்கவும்,நிறுவன முதலீட்டில்
மெட்டா வெர்ஸில் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலராக குறைக்கவும் என 3 விதமான யோசனைகளை முதலீட்டாளர்கள் வழங்கியுள்ளனர்.
புது வகையான உலகத்தை உருவாக்க நினைத்த மார்க் ஜூக்கர்பர்க், அதற்காக உலகின் பல நாடுகளிலும் இருந்து
பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை வேலைக்கு எடுத்து பணிகளை செய்து வருகிறார்.ஆனால் மெட்டா வெர்ஸ்
நுட்பம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.
மேலும் முதலீட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது.
வரலாற்றிலேயே முதன்முறையாக பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து பணியாளர்களை குறைக்க இருப்பது அதன் பணியாளர்கள்
மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயமற்ற எதிர்கால நுட்பத்துக்கு அதிக தொகையை மார்க் செலவிட்டுவிட்டதாகவும்
முதலீட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.