PSL விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி

முன்னுரிமையாக யாருக்கு நிதியை அளிக்க வேண்டும் என்பதே வணிகத்துறையில் PSL எனப்படுகிறது. இந்த பிஎஸ்எல் விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. தூய்மையான ஆற்றல், உள்ளிட்ட துறைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், எச்டிஎப்சி, ஃபெடரல் வங்கி உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகள் வரும் நிதியாண்டு முதல் அமலாக உள்ளன. புதுப்பிக்கத்தக்க வகையில் உள்ள வீட்டுக்கடன், உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வரம்பு இன்றி லோன்கள் அளிப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண் தொழில் முனைவோருக்கு அதிக கடன்களை தனியார் வங்கிகள் தரும் வகையில் புதிய விதிகள் உள்ளன. முன்னுரிமை கடன்கள் தொடர்பாக 40 விழுக்காடு அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் கிராமபுற கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்துள்ளனர். இந்த புதிய விதிகளால் ஏற்கனவே உள்ள வங்கி அடிப்படை கட்டமைப்புக்கு பாதிப்பு இல்லை என்ற போதிலும், வங்கிகளுக்கு அதிகம் உதவும் முயற்சியாகவே கருதப்படுகிறது. சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சிக்கு வங்கிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அரசு அறிவித்த சில அம்சங்களை நடைமுறை படுத்த ஓராண்டு கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.