3 மாதத்துக்குள் நடவடிக்கை- ஆர்பிஐ அதிரடி..
நகைக்கடன் வழங்குவதில் சில நிறுவனங்கள் தவறான முறையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனுப்பியது. அதில் அண்மையில் ரிச்ர்வ் வங்கி சில நிறுவனங்களில் பகுப்பாய்வு நடத்தியதாகவும், அதில் நகைகளின் மதிப்பு குறைத்து காட்டியதும், அடகு வைப்பதில் முறையான வெளிப்படைத் தன்மை இல்லாதததும் தெரியவந்தது. இதையடுத்து கடுப்பான ரசிர்வ் வங்கி, தவறு இழைத்த நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 மாதங்கள் அவகாசத்துக்குள்ள அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்றும், உங்கள் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அண்மையில் நடந்த பகுப்பாய்வில், நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள், மூன்றாம் நபரை வைத்து நகைகளை பரிசோதித்தது தெரியவந்தது. அதேபோல் வாடிக்கையாளர் கண்முன் நடத்த வேண்டிய மதிப்பீடு செய்யவில்லை என்றும், கண்காணிப்பு குறைவாக இருந்ததாகவும், தங்க நகைக்கடனை திரும்ப செலுத்த முடியாத வாடிக்கையாளரின் நகைகளை ஏலமெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், போலியான எடை உள்ளிட்டவை இருந்ததையும் ரிசர்வ் வங்கி கண்டுபிடித்துள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.