தரகு கமிஷனின் புதிய மாற்றமா?

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.
தரகு கட்டணத்தை பகிர்வது குறித்தும் அவர் பேசியுள்ளார். கோல்ட்மேன்சாச்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் மல்ஹோத்ராவின் திறமை குறித்து பேசப்பட்டுள்ளது. அதில், வரிவிதிப்பு முறையில் சிறப்பாக செயல்பட்டவர் என்றும், நேரடி மற்றும் மறைமுக வரிகளை முறைபடுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. உலகளவில் ஒரு நிலையற்ற சூழல் நிலவும் நிலையில், தனது திறமையை ரிசர்வ் வங்கியிலும் மல்ஹோத்ரா பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக வேகமான பொருளாதார சரிவு இந்திய ரிசர்வ் வங்கிக்கு பெரிய சவாலை அளித்துள்ளதாக அமெரிக்க வங்கி கூறியுள்ளது. நிலையான பணமதிப்பை பெற பணவீக்கத்தின் ஏற்ற இறக்கங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அந்த வங்கி கூறியுள்ளது. அமெரிக்க வங்கி இப்படி கூறும் நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான நோமுரா,ரிசர்வ் வங்கிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன் விகிதங்களை மேலும் உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக நோமுரா கணித்துள்ளது. திட்டங்கள் வகுப்பதில் வல்லவரான மல்ஹோத்ரா, திட்டங்கள் தொடர்பாக பேசுவதிலும் மிகுந்த நேர்மையானவர் என்றும் கூறப்படுகிறது.