அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலையா?
அமெரிக்காவில் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. இதனால் பணவீக்கம் மெல்ல மெல்ல கட்டுப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் பத்திரங்கள் விற்பனை நல்ல பலனை தருகின்றன. குறிப்பாக 6 விழுக்காடு வரை வட்டி கிடைக்கும் என்பதால் மக்கள் அதிக ஆர்வமாக டாலர்கள்மீது முதலீடு செய்யாமல் பத்திரங்கள் மீது முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாத வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை அமெரிக்கா வெளியிட இருக்கிறது. அதில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தாலும், குறைந்தாலும் பெரிய தாக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்திரங்கள் மீதான வட்டியை 2 விழுக்காடு வரை அமெரிக்கா குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருமா , இல்லையா என்பது தெரியாத நிலையில், பிரபல ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், மந்தநிலை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவை மந்தநிலை அடுத்தாண்டு தாக்க வாய்ப்புகள் 20 % மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும், பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் 6 விழுக்காடாகவே தொடர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.