99.1%புகார்களுக்கு தீர்வு..
மின்சார பைக் உற்பத்திக்கு பெயர் பெற்ற நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களில் 99.1%தீர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 10,644 புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
இதற்கு முக்கியத்துவம் அளித்து புகார்களை தீர்க்க முடிந்ததாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய அளவில் இ-ஸ்கூட்டர் பிரிவில் 27 விழுக்காடு பங்களிப்பை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கொண்டுள்ளது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்துக்கு அண்மையில் சிசிபிஏ என்ற அமைப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் தவறான விளம்பரம், சீரற்ற வணிக பழக்கம் இருப்பதாக புகார்கள் குவிவதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சிசிபிஏ அமைப்பு கேட்டுக் கொண்டது. நகைச்சுவை நடிகர் குனால் கம்ராவுடன் வெளிப்படையாகவே ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்1 x2 கிலோவாட் ஸ்கூட்டரில் திடீரென விலை குறைக்கப்பட்டது. இதனால் மானியம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இது பற்றியும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விளக்கத்தையும் ஆதாரங்களுடன் சமர்ப்பித்துவிட்டது.