22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

எலக்ட்ரோலெக்ஸ் நிறுவனத்திலும் தொடங்கியது பணிநீக்கம் ..

உலகின் பல நாடுகளிலும் முன்னணி வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்வதில் எலெக்ட்ரோலெக்ஸ் நிறுவனம்
முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. ஸ்வீடனை தலைமை இடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது
அந்த நிறுவனத்தில் 55 ஆயிரம் பேருக்கு அதிகமாக பணியாற்றும் நிலையில், வடக்கு அமெரிக்காவில் அதன் விற்பனை
கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யவும் சிக்கன நடவடிக்கையாக 3,500 முதல் 4000 பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. குக்கர்கள்,மைக்ரோ வேவ் அவன்,பாத்திரம் கழுவும் இயந்திரங்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. எலக்ட்ரோலெக்ஸ்,மற்றும் வேர்ல்பூல் நிறுவனங்கள் உலகளவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை மந்தமானதால் எலெக்ட்ரோலெக்ஸ் நிறுவன பங்குகள் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. மேலும் குறிப்பிட்ட இந்த நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டில் மட்டும் சுமார் 385 மில்லியன் குரோனர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த எலெக்ட்ரோலெக்ஸ் நிறுவனம் இவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளதா என்று சில வாடிக்கையாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *