“ஒரு நாள் மழையால 255 கோடி ரூபாய் நஷ்டம்”…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 30ம் தேதி பெரிய மழை கொட்டித் தீர்த்த்து. இதனால் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள அவுட்டர் ரிங் ரோடு பகுதி திக்குமுக்காடியது. மோசமான வடிகால் வசதிகளால் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைத்திருப்போர் சங்கம் ஒரு கடிதத்தை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் அளித்தனர். அதில் கடந்த 30ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் போக்குவரத்து நெரிசலால் ஐடி ஊழியர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த்தாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 5 மணி நேர போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஊழியர்களால் 255 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜபுரம் தொடங்கி சென்ட்ரல் சில்க் போர்டு அமைந்துள்ள பகுதி வரையிலான 17 கிலோமீட்டர் தூரம் இந்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்த நிலையில் முறையற்ற வடிகால் வசதி காரணமாக பெரிய வெள்ளத்தில் பெங்களூரு நகரம் சிக்கியது.இதனால் தொழில் முதலீட்டாளர்களிடம் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இன்னமும் சிலஇடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மாநிலத்தில் பெய்த கனமழையால் 27 மாவட்டங்கள் மற்றும் 187 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.