ஜேஎஸ்டபிள்யூவின் புதிய மின்சார கார்..
இந்தியாவில் மின்சார வாகனத்துறை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வரும் இந்த நிலையில் பிரபல ஸ்டீல் நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ தனது சொந்த மின்சார காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த SAIC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள அந்த நிறுவனம், மேக் இன் இந்தியா தயாரிப்பாக இந்திய கார்களை தயாரிக்க இருக்கிறது. சீனாவின் உப நிறுவனமாக செயல்படாமல் இந்தியாவிலேயே அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்ய விரும்புவதாகவும், இந்தியாவிலேயே தங்கள் மின்சார கார்களை விற்கவும் முடிவெடுத்துள்ளனர். SAIC நிறுவனத்திடம் இருந்து MGmotorஇந்தியா நிறுவன பங்குகளை JSW நிறுவனம் வாங்கியது. 2020ஆம் ஆண்டு எல்லையில் நடந்த இந்தியா-சீனா சண்டைக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சீன நிறுவனத்துடன் கைகோர்த்து jsw தனது புதிய காரை மகாராஷ்டிரா மற்றும் அவுரங்காபாத்தில் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. 27,200 கோடி ரூபாய் முதலீட்டில் அவுரங்காபாத்தில் கார் உற்பத்தி தொடங்கவும், வணிக வாகனங்கள் தயாரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையால் 5,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே போட்டி கடுமையாகி வரும் நிலையில், டாடா, மஹிந்திரா, ஹியூண்டாய் உடன் JSW கார்கள் விற்பனைக்கு தயாராகின்றன. JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 6,019 யூனிட்களை கடந்த நவம்பரில் விற்பனை செய்துள்ளன. இது ஆண்டுக்கு ஆண்டு 20% வளர்ச்சியாகும். வின்ட்சர் வகை கார்கள்தான் 3,144 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனை சீனாவை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது.