எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம்?
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதாவது mclr எனப்படும் கடன் விகிதம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரைக்குமான காலகட்டத்தில் 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இது 3,6 மற்றும் ஓராண்டுக்கான கடன்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. உயர்த்தப்பட்ட கடன் விகிதம் கடந்த 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. ஓவர்நைட் மற்றும் மாதாந்திர mclr விகிதம் தற்போது 8.20% ஆக உள்ளது. 3 மாதத்துக்கான MCLR விகிதம் 8.50%-ல் இருந்து 8.55%ஆக உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்கான இந்த விகிதம் 8.85%–ல் இருந்து 9.0%ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கான விகிதம் 8.95%-ல் இருந்து 9%ஆகவும், இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்கான விகிதம் 9.05%-ல் இருந்து 9.10%ஆக அதிகரித்துள்ளது. வீட்டுக்கடன்கள் போலவே வாகனக் கடன்கள் விகிதம் ஓராண்டு mclr மற்றும் வட்டி விகிதம் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும். இதே நேரம் பாரத ஸ்டேட் வங்கியின் தனிநபர் கடன்கள் இரண்டாண்டுகள் Mclr 9.05%ஆக உள்ளது. எஸ்பிஐ வங்கியின்பேஸ் ரேட் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 10.40%ஆக இருக்கிறது. அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்த ரெபோ வட்டி விகிதத்தின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தனது இணையபக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள், மற்றும் அது சார்ந்த தகவல்களை அந்த வங்கியின் இணைய பக்கத்தில் மக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.