NRIகளுக்கு செபியின் புதிய விதி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும் சிபி கோடு தேவை என்றும், ஒரே ஒரு கிளியரிங் மெம்பர் மட்டும் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிளியரிங் கார்பரேசன்ஸ் என்ற அமைப்பு என்ஆர்ஐகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் என்றும் PAN எண்ணை வைத்து இந்த கண்காணிப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை வரும் 31 ஆம் தேதிக்குள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் வணிகம் மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் சிபி கோட் வாங்க வேண்டும், ஒரே நேரத்தில் ஒரே ஒரு கிளியரிங் மெம்பருடன் மட்டுமே இயங்க முடியும். பான் எண் தனித்துவமானது என்பதால் அதனை பயன்படுத்தி கிளையன்ட் நிலைகளை அறிய முடியும். பான் எண் மட்டும் இருந்தாலே போதுமானது என்றும் சிபி கோடு தனியாக தேவைப்படாது என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், என்ஆர்ஐகளின் முதலீடுகளை கிளியரிங் கார்பரேஷன் அமைப்பு கண்காணிக்கும் என்றும். என்ஆர்ஐகளின் நிலையை செபி அவ்வப்போது மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.