22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

9லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் நடுவே ஆயிரத்து 200 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்து 79ஆயிரத்து212 புள்ளிகளாக இருந்ததுதேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் குறைந்து,24ஆயிரத்து 39 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.ஊடகம்,உலோகம், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட்துறை பங்குகள் 3 விழுக்காடு வரை சரிந்தன. SBI Life Insurance, Infosys, TCS, Tech Mahindra, IndusInd Bank உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Axis Bank, Adani Enterprises, Shriram Finance, Adani Ports, Trent நிறுவன பங்குகள் சரிவை கண்டன. Navin Fluorine, Anupam Rasayan, UltraTech Cement, JK Cement, Dalmia Bharat, Coromandel International, UPL உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் ஏற்றம் கண்டன ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து5 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 40 ரூபாயாக இருந்தது. . வெள்ளி விலை 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *