தொடர்ந்து சரிந்து வரும் சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள் 6 ஆவது நாளாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மும்பை பஙகுச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்து 77 ஆயிரத்து 580புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது . தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26புள்ளிகள் குறைந்து 23,532 புள்ளிகளில் நிறைவடைந்தது. Eicher Motors, Hero MotoCorp, Reliance Industries, HDFC Life, Kotak Mahindra Bank உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. HUL, BPCL, Tata Consumer, Nestle, Britannia ஆகிய நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. FMCG,ஆற்றல், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 0.3 முதல் 1 விழுக்காடு வரை சரிவை கண்டன. ஆட்டோமொபைல்துறை, ஊடகம், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 0.6 முதல் 2 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. HCL Technologies, Banco Products, Kiri Industries, Garware HiTech, JSW Holdings, Sasken Technologies, Pix Transmissions, AMI Organics, Timex Group, Vikas WSP,உள்ளிட்ட 140க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத ஏற்றம் கண்டன நவம்பர் 14 ஆம் தேதியான வியாழக்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை 880 ரூபாய் குறைந்து 55ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 110 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 99 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் செய்கூலி சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், ஜிஎஸ்டி நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.