சீனாவில் உயர்ந்த ஸ்டீல் விலை..
இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டீலின் மதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், மலிவான விலையில் சீன ஸ்டீல் இந்திய சந்தைகளில் வியாபாரிகளுக்கு பெரிய சவால் அளித்தது. இந்த நிலையில் சீனாவில் எச் ஆர்சி என்ற வகை ஸ்டீலின் விலை கடந்த செப்டம்பரில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சீனாவில் ஸ்டீல் விலை உயர்ந்துள்ளதால் அவை இந்தியாவிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதால் இந்திய வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கட்டுமானம், ஆட்டோமொபைல், உற்பத்தி துறைக்கு ஸ்டீல் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த விலை சீனாவிலேயே அதிகரித்துள்ளதால் மக்கள் இந்தியப் பொருட்களை வாங்கவே அதிகம் விரும்புகின்றனராம். இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக சீன ஸ்டீல் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அண்மையில் அதிகாரிகள் வடமாநிலங்களில் சோதனையை தீவிரப்படுத்தி இருந்தனற். வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான பொது இயக்குநரகத்தில் அண்மையில் இது பற்றி புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. அண்மையில் சீனாவில் பொருளாதார மீட்பு ஊக்கத் தொகை அளிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டீலின் உற்பத்தி அளவு குறைவு என்பதால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நிலக்கரி, இரும்புத்தாது ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்ததே ஸ்டீலின் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் ஸ்டீல் விலை உயர்ந்ததால் இந்திய வணிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.