விடைபெறுகிறார் சக்தி காந்ததாஸ்..

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிதி சார்ந்த இதழ் ஒன்றில் உலகின் சக்திவாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார் சக்திகாந்ததாஸ், நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி தாஸ் கடைசியாக பங்கேற்றார். இந்திய பொருளாதாரம் கடுமையான சூழலை சந்தித்த போது, சிறப்பாக செயல்பட்டவர் சக்தி காந்ததாஸ். உர்ஜித் படேல் திடீரென விலகிய போது உள்ளே வந்த சக்தி காந்ததாஸ் சிறப்பாக பணியாற்றினார். பெருந்தொற்று தாக்கியபோது ரெபோ வட்டி விகிதத்தை இதுவரை இல்லாத வகையில் 4 விழுக்காடா குறைத்து இந்திய பொருளாதாரத்தை மீட்டார். மிகச்சிறப்பாக செயல்பட்ட தாஸின் திறமையை கண்ட மத்திய அரசு மேலும் 3 ஆண்டுகள் சக்தி காந்ததாஸையே 2021-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக மீண்டும் நியமித்தது. ரிசர்வ் வங்கி 2.11 டிரில்லியன் அளவுக்கு டிவிடண்ட் கொடுத்ததும் தாஸ் ஆளுநராக இருந்தபோதுதான். 38 ஆண்டுகளாக பல்வேறு குடிமைப்பணிகளில் ஈடுபட்ட தாஸ் தற்போது விடை பெற்றுள்ளார்.