ஷெயினை மீண்டும் களமிறக்கிய ரிலையன்ஸ்…

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலை அடுத்து சீன நிறுவனமான ஷெயினை இந்திய அரசு தடை செய்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் தரவுகளை இந்தியாவிலேயே வைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷெயினுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் பேஷன் ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் வியாபார ஒப்பந்தம் செய்து வருகிறது. ஷெயின் நிறுவனத்தின் பொருட்களை அஜியோ இணையதளத்தில் மக்கள் பார்க்கும் வகையில் பரிசோதனைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தற்போது சிங்கப்பூரைச் சேர்ந்த நபரால் ஷெயின் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம் டாடா குழுமத்தின் சூடியோ, பிளிப்கார்ட்டின் மிந்த்ரா உள்ளிட்ட இணைய வணிக நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்திய பேஷன் சந்தைகள் வரும் 31 ஆம் நிதியாண்டின்போது 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முறைப்படுத்தப்படாத ஏராளமான நிறுவனங்கள் ஆடை உற்பத்தி செய்து வந்த போதிலும், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் ரோட்கெட் பிசினஸ் என்ற நிறுவனத்திடன் இணைந்து உள்ளூர் மின்வணிக நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. ஷெயின் என்ற பிராண்டின் கீழ் இந்தியாவில் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.