ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அதிர்ச்சி:
வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் பே மண்ட்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்வி மற்றும் வாடகை செலுத்துவோர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில நிதி நுட்ப நிறுவனங்கள் இந்த வணிக சேவைகளை தவறாக பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கே ஓய் சி எனப்படும் வாடிக்கையாளர் விவரம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கிரெட், நோ புரோக்கர் போன்ற நிருவனங்களில் பரிவர்த்தனை யும் குறைய வாப்பு ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகள் மீறப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேடி எம் பேமென்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம் போட்டுள்ள நிலையில், தற்போது நிதி நுட்ப நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . ரிசர்வ் வங்கியின் முடிவு பலரையும் அதிர வத்தாலும், பாதுகாப்புக்காக தான் இவ்வாறு , நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மற்றொரு தரப்பு ஆதரவு கரம் நீட்டி வருகிறது