இவ்வளவு பணமா?..
செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டமான PLIயில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான ஒப்புதலும் நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது
வரும் 2026ம் ஆண்டு இந்தியாவில் உள்ள மின்னணு மற்றும் செமிகண்டெக்டர்கள் உற்பத்தியாளர்களின் ஆலைகளால் அந்த துறை சார்ந்த சந்தை மதிப்பு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் செமிகண்டெக்டர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது