விரைவில் H,L பிரிவு விசாக்களுக்காக 1 லட்சம் அப்பாய்ண்ட்மெண்ட்கள்..
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்ல மாணவர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் மற்றும் வியாபார நோக்குடன் பயணிப்பவர்களுக்கு B1,B2 ரக விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு செல்வோருக்கான விசாக்களை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக குறைக்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க தூதரங்களில் இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சூழல் கிட்டத்தட்ட நிறைவுற்ற நிலையில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவிலேயே விசா வழங்கும் பணியாளர்கள் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாகவும், இதனால் விசாவை வழங்கும் பணியில் உள்ள தொய்வு களையப்படும் என்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் டெல்லியில் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அமெரிக்காவுக்கு செல்ல விசா கிடைக்க நேர்காணல் நடத்துவதற்காக காத்திருப்போரின் நாட்கள் மும்பை மற்றும் டெல்லியில் சராசரியாக 848 மற்றும் 833 நாட்களாக உள்ளது.
மேலும் H,L பிரிவு பணிகளுக்காக விண்ணப்பம் செய்வோருக்காக வரும் வாரங்களில் 1 லட்சம் அப்பாய்ண்மெண்ட்கள் தயார் செய்யப்படும் என்றும் தூதரக அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.