தங்க முதலீட்டில் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதி ஏன்?

தங்க முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை பாதியில் எடுத்துக்கொள்ளும் வகையிலான அறிவிப்பை கடந்த 21 ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கடந்த 2017 முதல் செப்டம்பர் 2020 வரை 34 வகைகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை எப்போது எடுக்கலாம் என்ற விரிவான தகவலை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதாவது வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பணத்தை எடுக்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே வரும் நிலையில் தங்கப்பத்திரங்களின் முதிச்சி, முன்கூட்டியே பணம் எடுத்தல் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி கணக்கிட்டுதான் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்கப்பத்திரங்கள் மீதான முதலீடுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளன. முதல் பத்திரங்கள் வெளியானபோது ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 684 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த 2023-ல் தங்கத்தை மீட்கும்போது அதன் மதிப்பு 6,132 ரூபாயாக இருந்தது. தங்க முதலீடு செய்தவர்களுக்கு அரசு சார்பில் வட்டியும் அளிக்கப்பட்டது. வட்டி விகிதமாக 2.75 விழுக்காடு அரசு ஆண்டுக்கு இரு முறை அளித்து வந்தது. 2016-ல் மீண்டும் தங்கப்பத்திரம் வெளியிட்டபோது வட்டி விகிதம் 2.5 %ஆக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது முன்கூட்டியே பணத்தை எடுக்க ஏன் மத்திய அரசு அனுமதித்தது என்ற காரணிகளை பார்க்கலாம்., முதல் காரணமாக கடந்த 2015-ல் முதலீடு செய்தவர்களுக்கு அரசு தனது கையில் இருந்து பணத்தை அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் தங்கம் விலை கணிக்க முடியாததாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த சலுகையை முதலீட்டாளர்களுக்கு அளித்து சுமையை குறைத்துக்கொள்ள பார்க்கிறது. 2018-19 காலகட்டத்தில் கொரோனா வந்ததால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்காக மட்டும் மத்திய அரசு 55, 056 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்ட தங்கப்பத்திரங்கள் விலை ஒரு கிராம் 6,263 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு கணிசமாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது. எனவே புதிய பத்திரங்களை அதன்பிறகு புதிய பத்திரங்கள் எதையும் வெளியிடவில்லை.