8 ஆண்டுகளில் 160%வளர்ச்சி..
தங்க கடன்பத்திர திட்டத்துக்கு SGB என்று பெயர். அரசாங்கமே இந்த தங்க பத்திரத்தை வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் 3 ஆவது ஸ்கீம் தற்போது முதிர்வடைந்துள்ளது. அதாவது கடந்த 2016-17 காலகட்டத்தில் அரசு வெளியிட்ட பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் தற்போது அவர்களுக்கு 159 விழுக்காடு வருவாய் கிடைத்திருக்கும். இது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2016-17 காலகட்டத்தில் SGB 3-ல் முதலீடு செய்திருந்தால் வரும் 16 ஆம் தேதி அந்த தொகையை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். அரசு வெளியிடும் தங்கப்பத்திரம் 999 மதிப்பு தூய்மையானது. 2016-17 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் அப்போதைய தொடக்க விலை ஒரு கிராம் 3007 ரூபாய் தற்போது இந்த மதிப்பு 7788 ரூபாய். குறிப்பிட்ட இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் முதிர்வு காலம் முடிந்து, முதலீட்டாளர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம். அரையாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 2.50%வட்டியாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.