பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி..
செப்டம்பர்4 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 352 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81 புள்ளிகள் சரிந்து 25ஆயிரத்து 198 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. Asian Paints, Grasim Industries, HUL, Apollo Hospitals,Sun Pharma ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Wipro, Coal India, ONGC, Hindalco Industries, M&M நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. FMCG, ரியல் எஸ்டேட், மருந்துத்துறை பங்குகள் மட்டுமே அரைவிழுக்காடு வரை ஏற்றம் கண்டன, ஆட்டோமொபைல், வங்கி, ஆற்றல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகத்துறை பங்குகள் 0.4 முதல் ஒரு விழுக்காடு வரை பங்குகள் விலை சரிந்தன. Alkem Laboratories, Biocon, BLS International, Bombay Burmah, CCL Products, Colgate Palmolive, FDC, HPCL, JM Financial, Jubilant Ingrevia, Lupin, Marksans Pharma, Max Financial, Morepen Lab, NIIT, Piramal Pharma, PNB Housing Finance உள்ளிட்ட25 0க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டன. செப்டம்பர் மாதம்4ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலைகிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 90 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 90 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.