பங்குச்சந்தைகளில் லேசான சரிவு
இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236புள்ளிகள் சரிந்து, 81,289புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி93 புள்ளிகள் குறைந்து 24ஆயிரத்து 548 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. துவக்கத்தில் பங்குச்சந்தைகள் சிறப்பாக இருந்த அதே நேரம் இரண்டாவது பாதியில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் முயன்றனர். இதனால் இரண்டாவது பாதியில் பாதிப்பு ஏற்பட்டது. Adani Enterprises, Tech Mahindra, IndusInd Bank, Bharti Airtel, Adani Ports உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. NTPC, Hero MotoCorp, HUL, Coal India,BPCL, ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவை கண்டன. அதேநேரம் Chalet Hotels, EID Parry, Max Healthcare, Muthoot Finance, Cofirge, Tech Mahindra, Vedanta, Persistent Systems, Kaynes Technologies, Info Edge, Dixon Technologies, LTIMindtree, Infosys, Firstsource Solustions, HCL Technologies, Wipro, MphasiS, உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. வியாழக்கிழமை ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி 7285 ரூபாயாகவும், ஒரு சவரன் 58,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 104 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.