சூப்பர்!!! வரி இல்லன்னு சொல்லிட்டாங்க!!!
இந்தியாவில் இருந்து ஸ்டீல் பொருட்கள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை ஸ்டீல் பொருட்களுக்கு மத்திய அரசு 15% ஏற்றுமதி வரி விதித்தது இதையடுத்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி வெகுவாக குறைந்துவிட்டது. அரசுக்கும் வரி வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சில ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பொருட்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 58%இரும்பு தாது அளவு அல்லது அதற்கும் குறைவாக இரும்பு உள்ள பொருட்களின் ஏற்றுமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது. ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் சில பொருட்கள் மட்டும் வரியே இல்லாமல் இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அது சனிக்கிழமை நவம்பர் 19ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 600 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் மேலாக உருளை வடிவிலான ஸ்டெயின்லஸ் ஸ்டீல்,ஆங்கிள்,பார் மற்றும் ராடுகளுக்கான ஏற்றுமதி வரியும் 0 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலன்பெறும் நோக்கில் இந்த அதிரடி முடிவை மத்திய அரசு எடுத்து