விமானப்படைக்கு விமானம் தயாரிக்கிறது டாடா நிறுவனம்
ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்து சி-295 ரக விமானத்தை குஜராத்தில் உள்ள வதோதராவில் தயாரிக்க உள்ளனர்ட குஜராத்தில் 40 விமானங்கள் மட்டுமின்றி, விமானப்படைக்கு பிற விமானங்களையும் இந்த ஆலையில் உற்பத்தி
செய்ய முடியும், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு 56 சி-295 விமானங்கள் உற்பத்தி செய்ய
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன
ஆவ்ரோ 748 விமானங்களுக்கு மாற்றாக இந்த புதிய சி-295 விமானங்கள் களமிறங்க உள்ளன
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி புதிதாக முதல்கட்டமாக 16 விமானங்கள் ஸ்பெயினல் உற்பத்தி செய்யப்பட்டு
பின்னர் அது இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படும். மற்ற 40 விமானங்கள் இந்தியாவிலேயே தயாராக உள்ளன
இந்த விமான உற்பத்திக்கு DGAQA என்ற மத்திய விமான போக்குவரத்து மற்றும் தர ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதுட
இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கு அந்த அமைப்பு அனுமதி அளித்திருப்பது இதுவே முதன்முறையாகும் இந்த வகை சி-295 ரக விமானங்களில் ஒரே நேரத்தில் ஒரு விமானத்தில் 71 வீரர்கள், 50பாராகிளைடிங் வீரர்கள் எளிதாக பறக்க முடியும்