டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட தகவல்..
டாடா மோட்டார்ஸ் அண்மையில் இலுஸ்ட்ரிட்டிவ் வரி கணக்கிடும் புதிய நுட்பத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டிவிஆர் (dvr) என்ற பங்குகளின் உரிமையை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட டாக்ஸ் கால்குலேட்டர் என்ற டிஜிட்டல் உபகரணத்தால் டாடா மோட்டார்ஸ் பங்கு வைத்திருப்போருக்கு மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்,உள்ளிட்ட அம்சங்களையும் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. டிவிஆர் பங்குககளை விரைவில் ரத்து செய்துவிட்டு சாதாரண பங்குகளை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 10 டிவிஆர் பங்குகளுக்கும் 7 சாதாரண பங்குகளை அளிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பங்குகளை மாற்றுவதற்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதலும் அளித்துள்ளது. மூலதனத்தின் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்த முயற்சியை டாடா மோட்டார்ஸ் எடுத்துள்ளது. எந்த பங்குக்கு எவ்வளவு வரி உள்ளிட்ட விவரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட இருக்கிறது. 15 மாதங்களுக்குள் அனைத்து வரவு செலவு கணக்குகள் எவ்வளவு என்ற விவரங்கள் இந்த புதிய கால்குலேட்டரில் இடம்பிடித்துவிடும். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்கள் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு வரி எவ்வளவு என்பதை தெரிவிக்க இந்த கால்குலேட்டரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஆர் நடைமுறையின்படி ஒரு நிறுவனத்தின் டிவிஆர் பங்குகளை சாதாரண பங்குகளை மாற்றும்போது 10 டிவிஆர் பங்குகளுக்கு 7 சாதாரண பங்குகள் தரப்படவேண்டும் என்பது விதியாகும். இந்த விதிப்படி டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ள அம்சங்கள் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. ஒப்புதல் கிடைக்கும் தேதி செப்டம்பர்11 மற்றும் பங்குகள் ஒதுக்கீடு வரும் 18 ஆம் தேதியும், பணமாக மாற்ற செப்டம்பர் 21 ஆம் தேதியும் இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது