2 நிறுவனங்களுடன் கை கோர்க்கும் டாடா மோட்டார்ஸ்..
டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா மற்றும் தண்டர்பிளஸ் சொல்யூசன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை நாடு முழுவதும் மேம்படுத்த இந்த நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் இணைந்துள்ளது. மின்சார வணிக வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதிகளை 250 இடங்களில் உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொச்சி உள்ளிட்ட 50 நகரங்களில் இந்த பாஸ்ட் சார்ஜிங் வசதி அமைய இருக்கிறது. ஏற்கனவே டாடா நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 540 இடங்களில் சார்ஜிங் வசதி உள்ளது. பாஸ்ட் சார்ஜிங் வசதிகளுக்கான வன்பொருட்களை டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் விநியோகிக்கும், தண்டர்பிளஸ் சொல்யூசன்ஸ் நிறுவனம், அந்த வன்பொருட்களை நிறுவிக் கொடுக்கும்..
இந்த சார்ஜிங் வசதி உண்டானால் அதிக வருவாய், லாபம் மற்றும் தூய்மையான ஆற்றல் உள்ளிட்டவை கிடைக்கும். டாடாமோட்டார்ஸின் வணிக வாகனப்பிரிவின் தலைவர் வினை பதக் இதை உறுதி செய்திருக்கிறார். தற்போது வைர டாடா மோட்டார்ஸ் குட்டியானை என்று செல்லமாக அழைக்கப்படும் ஏஸ் வாகனங்களில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த வகை வாகனங்களுக்கு 150 சேவை மையங்களும் உள்ளன.