அரசிடம் டாடா மோட்டார்ஸ் கோரிக்கை..
மின்சார டாக்சிகளின் ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என்று பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 3.76 லட்சம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம் வைத்திருக்கும் அந்நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மின்சார வாகனங்களுக்கு அரசு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. 5 ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 6 மடங்கு உயரந்திருக்கிறது. சீனா மற்றும் ஜெர்மனியில் உள்ளதைப்போன்றதொரு திட்டங்களை மத்திய அரசு வகுத்து 20 விழுக்காடு வாகனங்கள் மின்சார வாகனங்கள் ஆகும் வரை சலுகைகள் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே FAME என்ற திட்டத்தின் நீட்சியாக சில திட்டங்கள் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவும் முடிவெடுத்துள்ளது. வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் FAME 2 திட்டம் முடிவுக்கு வர இருக்கிறது.
ஆண்டுக்கு 83 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்கும் டாடா நிறுவனம் மொத்த விற்பனையில் இரண்டரை விழுக்காடை கொண்டிருக்கிறது. அதே நேரம் சீனாவில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் 66 லட்சத்து 80 ஆயிரம் விற்றுள்ளன.
உலகளவில் 10 கார்கள் மின்சார கார்களாக விற்பனையானால் அவற்றில் 6 கார்கள் சீனாவில் விற்கப்படுகின்றன. ஒரு கிலோவாட்டுக்கு 10ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை அளிக்கவேண்டும் என்றும் 3 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும் என்றும் டாடா மோட்டார்ஸ் கோரியுள்ளது. டெல்லியில் போதுமான அளவுக்கு மின்சார வாகனங்களை இயக்க அனுமதி தேவை என்றும் அந்நிறுவனம் கோரியிருக்கிறது. காற்று மாசை குறைக்க கூடுதல் ஊக்கத் தொகைகளை அளிக்கவும் டாடா மோட்டர்ஸ் கோரியிருக்கிறது. ஏற்கனவே டியாகோ,டிகோர், பஞ்ச்,நெக்சான் ரக கார்களில் ஏற்கனவே மின்சார கார்கள் வசதியிருக்கும் நிலையில், ஹாரியர், கர்வ் ரக கார்களிலும் மின்சார கார்கள் வர இருக்கின்றன. இந்த 10 ஆண்டுகளுக்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மின்சார கார்கள் விற்பனை 50 விழுக்காடு வரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.