இருக்கிறது எல்லாம் புடுங்கினாதான் வரி வசூல் அதிகமாகும்!!!!
கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வருமான வரி முறை அறிவிக்கப்பட்டது இதில் குறைவான வருமான வரி மற்றும் குறைவான டிடக்சன்கள் உள்ளன. பெரும்பாலானோர் இந்த முறையை விரும்பாமல் உள்ளனர். இந்த சூழலில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பிடித்துள்ள பிபேக் டெப்ராய் என்பவர் புதிய வருமான வரி முறைதான் சிறந்தது என்றும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு புதிய முறைதான் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் உள்ள புதிய முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பழைய முறையை அரசாங்கம் முற்றிலும் நீக்க வேண்டும் என்றும் பல துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வருமான வரியில் ஏகப்பட்ட சலுகைகள் மக்களுக்கு அளிப்பதன் மூலம், உரிய கட்டமைப்பு வசதிகள், சேவைகளை அரசாங்கம் செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் பிபேக் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காடு மட்டுமே வரி வசூலில் கிடைப்பதாகவும் பிபேக் தெரிவித்துள்ளார். நேரடி வரிகள் மூலம் மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் மறைமுக வரிகள் பழைய வருமான வரி திட்டத்தில் அரசுக்கு நிதி இழப்பு அதிகம் உள்ளதாகவும் பிபேக் கூறியுள்ளார். அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 5.5% அளவுக்கு வரிகளில் உள்ள சலுகைகள் அரசுக்கு கிடைக்காமல் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 8ம் தேதி வரை நேரடி வரிகள் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அரசுக்கு வருமான வரி மூலமாக மட்டும் 8.98 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வரிஏய்ப்பு செய்வோரை கண்டறிந்து அரசுக்கு பணம் கொண்டுவரவே பலகட்ட முயற்சிகளை செய்து வருவதாகவும் பிபேக் தெரிவித்துள்ளார்.