கடன் வளர்ச்சி முடிவுக்கு வருகிறதா?
பணம் தேவைப்படுவோருக்கு கடன் வழங்குவதே வங்கிகளின் தலையாய பணியாகும். பொருளாதாம் மிக மோசமாக உள்ள போது நல்ல வாடிக்கையாளர்களை தேடி கண்டுபிடித்து பணம் வழங்குவது கடினமாக பணியாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 2 ஆவது காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 %ஆக சரிந்தது. இந்த நிலையில் தனிநபர் கடன்கள் வழங்கும் விகிதம் குறைந்திருப்பதாக எஸ்பிஐ தலைவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயம் மற்றும் சிறுகுறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் அதிகரித்துள்ளதாகவும், உணவு அல்லாத கடன் வளர்ச்சியும் தெளிவாக சரிந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு முன்பும் பின்பும், பொருளாதார மந்த நிலை இருந்தது உண்மைதான் என்றும் , கடந்த செப்டம்பரில் 14.4%ஆக இருந்த nfc எனப்படும் உணவு அல்லாத கடன்கள் அக்டோபர் 18 ஆம் தேதி நிலவரப்படி 12.8%ஆக குறைந்துள்ளது. நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அளித்த கடும் கட்டுப்பாடுகளும் கடன் வளர்ச்சி குறைய முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன்களை அளித்து மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய நிலையில் கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது. சிறுகுறு நிறுவனங்களுக்கான கடன்கள் குறைந்திருக்கும் அதே நேரம் பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் அதிகரித்துள்ளன. கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் குறுகிய கால கடன்களை நிறுவனங்கள் அதிகம் வாங்கியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. சிறு குறு நிறுவனங்களுக்கான கடன்களில் சில இடங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 48 விழுக்காடு அளவுக்கு சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தித்துறையும் வெறும் 2%வளர்ச்சியை பெற்றிருக்கும் நிலையில் கடன்கள் வழங்குவதில் வங்கிகள் ஆர்வத்தை குறைத்துக்கொண்டுள்ளனர்.