25புள்ளிகளை குறைத்தது பெடரல் ரிசர்வ்..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் ஒன்றரை விழுக்காடு உயர்ந்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களின் மதிப்பும் சரிந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் அறிவிப்பால் 10 ஆண்டுகள் கடன்பத்திரங்களின் வருவாய் 4.35 விழுக்காடாக குறைந்தது. தேர்தல் முடிவு பெடரல் ரிசர்வின் கொள்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் கூறியுள்ளார். பாவெல் இப்படி கூறினாலும் புதிய அரசின் திட்டங்களால் கண்டிப்பாக பெரிய மாற்றம் இருக்கும் என்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்கள் மீதான வட்டி விகிதம் கண்டிப்பாக குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மாறுதல்கள் எப்படி இருக்குமோ அதை சார்ந்தே இந்திய பங்குச்சந்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும். இந்த நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துக்கொண்டே இருப்பதால் அது இந்திய சந்தைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் சில்லறை பணவீக்கமும் அதிகளவில் இருந்து வருகிறது. உணவு தானிய பயிர்கள் மீதான எதிர்பார்ப்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதே பாணியில் விரைவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படவேண்டும் என்றும் நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.