கொரோனா நேரத்தில் வாங்கிய கடன் இன்னமும் அடையவில்லை…..
கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்றவர்களில் பலர் இதுவரை கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர்.
கொரோனா காலத்தில் பெற்ற கடன்களை இரு வகைகளாக பிரித்துள்ள ரிசர்வ் வங்கி, மொத்தம் 2 டிரில்லியன் இந்திய
ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை திருப்பி செலுத்தப்படாமல் வாராக்கடனாகவே இருக்கும் வாய்ப்புகள்
அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்றவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும் வட்டி செலுத்த தேவையில்லை
என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சிலர் மொத்த கடனையும் திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.
13 வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் கொரோனா காலத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி வரை திரும்ப வராத கடனின் அளவு 10 ஆயிரத்து 19 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கொரோனா காலகட்டத்தில் கடன் வாங்கி இருந்தாலும் அதனை முறையாக திரும்ப செலுத்துவோரின் அளவு 5,155 கோடி ரூபாயாக உள்ளது கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்று உண்மையிலேயே திரும்ப செலுத்த முடியாத பலர் இருப்பதாகவும், அவர்களுக்கு அளித்த கடன் தொகை வங்கிகளின் செயல்பாடுகளை எந்த வகையிலும் பெரிதாக பாதிக்காது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2022-23 நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் திரும்ப செலுத்தாத கடன்களின் அளவு 15 % என்கிறார்கள் 13 வங்கிகளை
சேர்ந்த நிர்வாகிகள். கொரோனா காலத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் உள்ளோரின் விகிதம் ஆர்பிஎல் வங்கியில் தான் அதிகமாக உள்ளது. முன்னணி தனியார் வங்கிகளான, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் இந்த விகிதம் முறையே 8 மற்றும் 25 % ஆக உள்ளன.