வரைமுறைகளை வகுத்த ரிசர்வ் வங்கி..
சுயகட்டுப்பாடு கொண்ட நிதி அமைப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு வரைமுறைகளை வகுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுயகட்டுப்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்கள் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், அதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சுயகட்டுப்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்களுக்கு ஆங்கிலத்தில் எஸ்ஆர்ஓ என சுருக்கமாக அழைக்கும் வழக்கம் உண்டு. இந்த வகை அமைப்புகள் துறை சார்ந்த பிரச்சனைகளை சரியான நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணியாற்றவும் இந்த வகை அமைப்புகளை ரிசர்வ் வங்கி அழைத்துள்ளது. அப்படி இணைவதன் மூலம் வரைமுறை படுத்தும் விதிகளையும் வகுக்க முடியும் என்றும் பிரச்சனைகள் வரும்போது முன்கூட்டியே எச்சரிக்கவும் முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் எஸ் ஆர் ஓக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரிசர்வ் வங்கி தயங்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ரசிர்வ் வங்கி விதிகளுக்கு உட்படாதபட்சத்தில் எஸ்ஆர்ஓ அமைப்புகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.