ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர்.
அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
தொடர் விலை சரிவை சரி செய்ய உற்பத்தியை குறைக்கும் ஓபெக் அமைப்பின் முடிவு, சவுதி அரேபியாவுக்கே பாதகமாக மாறும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது
ஏற்கனவே ரஷ்யாவின் போர் காரணமாக பொருட்களின் விலையும், விலைவாசி ஏற்றமும்உலக நாடுகளை சோதித்து வரும் நிலையில் ஓபெக் அமைப்பினரின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், ரஷ்யாவுடன் சேர்ந்து பாதகத்தை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஓபெக் அமைப்பு எடுக்கும் முடிவை அமெரிக்காவில் தடைசெய்யும் வகையில் நோபெக் என்ற பெயரிலான அமைப்பை உருவாக்க அமெரிக்க மக்கள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பைடன் அமைச்சரவை விரைவில் இதனை சட்டமாக்க உள்ளது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை சரிந்தவேகத்தில் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் ஓபெக் அமைப்புக்கு பைடன் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.