கூகுள் தேடலில் இது புதுசு….
கூகுளில் எதையோ தேடும்போது இனிமேல் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. அதாவது தேடுதளத்தில் ஏதோ ஒரு விஷயம் பற்றி தேடும்போது அது பணம் கொடுத்து எழுதப்பட்டதா இல்லை நேர்மையான உள்ளடக்கமா என்பதை கூகுள் விரைவில் வெளியிட உள்ளது
முதலில் இந்த வசதி செல்போன்களில் தேடும்போது மட்டுமே பிரித்து வழங்கப்பட உள்ளது. விரைவில் கனிணிகளிலும் தேடும்போது வித்தியாசம் தெரிய இருக்கிறது.
வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தவே இந்த நடைமுறையை கொண்டுவருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டிராய்டு செல்போன்கள் மற்றும் கூகுள் கிரோமில், பாஸ்கீ என்ற வசதியையும் குகுள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் இணைய தேடுதல் வசதி மேலும் எளிமையாக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனித்தனியே பின் நம்பர்கள் அளிப்பதன் மூலம் தேவையில்லாத தரவுகள் கூகுள் நிறுனம் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை அளவில் உள்ள பாஸ்கீ வசதி, விரைவில் சாதாரண பொதுமக்கள் கைகளுக்கும் அளிக்கப்பட உள்ளது.
பழைய ஆண்டிராய்டு டிவைஸ்களில் இருந்து தகவல்கள் கிளவுட் கம்பியூட்டிங் மூலம் அனுப்ப வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த பாஸ் கீ வசதி இந்தாண்டு இறுதியில் மக்கள் கைகளுக்கு வர உள்ளது.