தூக்கி வீசிய எலான் மஸ்க்!!!
இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகத்தில் 230 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் மிகமுக்கிய பதவிகளில் இருந்த பணியாளர்களில் 180 பேரை பணியில் இருந்து நீக்கி டிவிட்டர் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது உள்ளடக்கம்,சேல்ஸ், சோஷியல் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அரசு துறை சார்ந்தும், மிகவும் சிக்கலான பணிகளில் பணியமர்த்தப்பட்டிருந்த பணியாளர்களை மட்டுமே இந்தியாவில் டிவிட்டர் நிறுவனம் பணியில் தொடர வைத்துள்ளது. மற்றபடி பெரும்பாலான பணியாளர்கள் கருவேப்பிலை போல தூக்கி வீசப்பட்டுள்ளனர். பணியில் இருந்து நீக்கும் முன்பு ஒவ்வொரு பணியாளரையும் நேருக்கு நேர் அமர வைத்து பணிநீக்கம் குறித்த அறிவிப்பு தருவது வழக்கமாக உள்ள நிலையில், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனத்தில் தங்கள் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் இரவோடு இரவாக தூக்கியுள்ளனர். இவ்வாறு பணியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பணியாளர்களுக்கு 60 நாட்களுக்கான சம்பளத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.