“தொழில்நுட்ப அடிப்படையில் வரி தேவை”
படிம எரிபொருள், கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவில் வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்று டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் தலைமை செய்ல் துணைத்தலைவர் விக்ரம் குலாட்டி கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இந்த நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட் என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியது. இதன் விலையோ 48லட்சம் ரூபாயாகும். கரியமில வாயு பயன்பாட்டை குறைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களுக்கு வரி சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முற்றிலும் மின்சார கார்களுக்கு மட்டுமே தற்போது 5 விழுக்காடாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாகவும், அதே நேரம் ஐஸ் எனப்படும் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்களுக்கு 28 % வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். கிரயமில வாயு வெளியேற்றத்தின் அடிப்படையில் வரி விதிக்க 27-ல் 22 ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளதாகவும், பிரேசிலில் கூட இதே பாணியில் தான் நடப்பதாகவும்கூறியுள்ளார். இந்தியாவில் நாம் இந்த இலக்கில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதாகவும் குலாடி கூறியுள்ளார். அடுத்த 7-8 ஆண்டுகளில் இந்தியா சரியான திசையில் செல்லும் என்பதும் அவரின் கருத்து. ஹைப்ரிட் வகை காரகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று தாம் கூறவில்லை என்று தாம் கூறவில்லை என்று கூறிய குலாடி, தொழில்நுட்பத்தை வைத்தும், காலநிலை மாற்றத்தை மனதில் வைத்தும் வருங்கால தலைமுறையில் மனதில் கொண்டும் வரிகள் விதிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். கேம்ரி ரகத்தில் இந்தியாவில் இதுவரை 17,900 கார்களை டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகை கார்கள் கடந்த 2022-ல் இந்தியாவில் அறிமுகமாகின. பெட்ரோல் இன்ஜினில் இயங்கும் வகையில் இந்த கார் 2002-ல் இந்தியாவுக்குள் வந்தாலும் 2013 ஆம் ஆண்டே இந்த கார்கள் ஹைப்ரிடாக மாற்றப்பட்டன.