60 டாலருக்கு கீழ் குறைய வாய்ப்பு கம்மி..
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கீழ் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரி ஒருவர் கணித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பு முறை பங்குச்சந்தைகளில் பாதகமான முடிவாக மாறியது. இதனால் எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தன. எனினும் இது ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்று அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் விவேக் சந்திரகாந்த் டோங்கான்கர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் பிரென்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 65 டாலர்களாக குறைந்துள்ளது. ஏப்ரல் 2 முதல் 4 ஆம் தேதி வரை மட்டும் 10 டாலர்கள் சரிவு காணப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைகிறதோ அப்போதெல்லாம் பணத்தை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவதாகவும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
70 டாலருக்கு மேல் சென்றால்தான் இந்தியாவுக்கு லாபம் என்றும் விவேக் சுட்டிக்காட்டினார். அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக்க வேண்டும் என்பதே டிரம்பின் கொள்கையாக இருக்கிறது. சர்வதேச அளவில் கேஸ் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும், இந்தியாவின் கேஸ் விலை உயர்வும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது உள்ளூர் கேஸ் விலை 4 முதல் 6.75 டாலர் என்ற அளவில் இருப்பதாகவும் விவேக் சுட்டிக்காட்டினார்.
